முன் ஜாமீன் கேட்கும் ராயபுரம் மனோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சத்தியமூர்த்தி பவனில் நடந்த பெரும் வன்முறைச் சம்பவம் தொடர்பாக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ தேடப்பட்டு வருகிறார்
இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் போராட்டம் நடத்தியமுன்னாள் எம்.எல்.ஏ. செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் மீது சத்தியமூர்த்தி பவனில்ராயபுரம் மனோவின் ஆட்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டனர்.இதில் பலர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம்தொடர்பாக மனோ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனோ உள்ளிட்டவர்களைபோலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி ராயபுரம் மனோ சென்னை முதன்மை அமர்வுநீதின்றத்தில் மனு செய்துள்ளார். அதில் அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக தன் மீதுகொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளதாக மனோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications