தேர்தல் டிக்கெட் கேட்ட பெண் போலீஸ் சீட் கிழிப்பு!
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்த பெண்காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர்லட்சுமி. இவர் திமுக அனுதாபி என்று கூறப்படுகிறது.சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பி திமுகவில் சீட் கேட்டுவிண்ணப்பித்திருந்தார் லட்சுமி.
இதுகுறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆயுஷ்மாணி திவாரிக்குப்புகார் சென்றது.
அரசு ஊழியராக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது, தேர்தலில் போட்டியிடக் கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நடத்தை விதிறைகளை மீறி லட்சுமி செயல்பட்டதால் அவரை தற்காலிகபணிநீக்கம் செய்து எஸ்.பி. திவாரி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications