அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்ஐ!
பாண்டிச்சேரி:
புதுவை சட்டசபைத் தேர்தலில் ஊசுடு (தனி) தொகுதியில், அதிமுக சார்பில், அம்மாநில உதவி சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் போட்டியிடுகிறார்.
புதுவையில் அதிமுக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கண்ணனின் புதுச்சேரிமுன்னேற்றக் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தலா 2தொகுதிகளிலும் போடடியிடுகின்றன.புதுவை தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது.தற்போதைய எம்.எல்.ஏக்கள் அன்பழகன், காசிலிங்கம் ஆகிய இருவருக்கும் மீண்டும்சீட் கிடைத்துள்ளது.
ரெட்டியார்பாளையத்தில் பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ரெட்டியாருக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.
ஊசுடு (தனி) தொகுதிதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொகுதியின்அதிமுக வேட்பாளராக செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது உதவிசப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
செல்வராஜ், கடந்த 2001ம் ஆண்டிலேயே சீட் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை.தற்போது கிடைத்துள்ளதால் தனது சப் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications