ராஜா-தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு
டெல்லி:
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கல்விநிறுவன அதிபர் எஸ்.ஏ. ராஜாவை உடனடியாக திருநெல்வேலியில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஏ.,ராஜா தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் அசோக் தேசாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது:ராஜா தற்போது சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கடந்த ஜனவரி 27ம் தேதி சிறைஅதிகாரிகள் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு தந்தி அனுப்பினர்.
அதை ஏற்ற உச்ச நீதிமன்றம் ராஜாவை, திருநெல்வேலி அரசு மருத்துவமனையின்தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி தனியார்மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ராஜா சில நாட்களுக்கு பின் மீண்டும் சிறைமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவரது உடல் நிலை மோசமாக இருப்பதால் தனியார் மருத்துவமனைக்குமாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்நதார்.
இதை விசாரித்த நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், நலோகர் ஆகியோர் அடங்கியபெஞ்ச், நெல்லையில் உள்ள கேலக்ஸி தனியார் மருத்துவமனைக்கு ராஜாவை மாற்றஉத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications