ஊட்டி வளர்த்தேன் அன்பு தங்கச்சி..தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி!
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் எப்படிப் போட்டியிடுவது என்பது குறித்து ஏப்ரல் 2ம் தேதிகூடும் கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என லட்சியதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
எந்தக் கூட்டணியிலும் சேர்காததால் தனித்துப்போட்டியிட டி.ஆர். தவித்துவருவதாகவும் கூறப்படுகிறது.முதல்வர் ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்து வந்தவர் டி.ராஜேந்தர். திமுக தலைவர்கருணாநிதியையும், அவரது குடும்ப அரசியலையும் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்தார்.
தனக்கு பூங்கா நகர் தொகுதியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால் சீட் எதையும் கொடுக்காமல் டி.ஆருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்ஜெயலலிதா.
இந் நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்ககட்சியின் அவசர பொதுக்குழுவைக் கூட்டியுள்ளார் டி.ஆர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 2ம் தேதி கட்சியின்பொதுக்குழு கூடுகிறது. அப்போது தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணிஅமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து விவாதிக்கப்படும்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் ஆராயப்படும். தேர்தலில் போட்டியிடவிரும்புவோர் பொதுத் தொகுதிக்கு ரூ. 2,000ம், தனித் தொகுதிக்கு ரூ. 1,001ம்செலுத்தி (மொய் வாங்குறாரோ?) விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம் என்றுகூறியுள்ளார் ராஜேந்தர்.
இந்த நேரத்தில் டி.ஆர். எழுதிய ஒரு பாடல் அவருக்கே சரியான சிச்சுவேச்சன்சாங்காக அமைந்துள்ளது.
அந்தப் பாடல்:
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
ஊட்டி வளர்த்தேன் அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி!












Click it and Unblock the Notifications