பாண்டிச்சேரி விடுதலை சிறுத்தை வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள்வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் சிறுத்தைகள்,புதுவையில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தத் தொகுதிகளுக்கானவேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்தார்.

அதன்படி ஏம்பலம் தொகுதியில் பாவாணன், நெடுங்காடு தொகுதியில்வைத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்போம்: தேர்தல் அறிக்கை

தனியார் துறை மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க பாடுபடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

- குண்டர் சட்டம், டெஸ்மா சட்டத்தை ஒழிக்க பாடுபடுவோம்.

- கொத்தடிமை முறை ஒழிக்கப்படும்.

- மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்போம்.

- சொந்த வீடு இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஜனநாயக சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

- தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை உயர்த்திட துறை வாரியாக மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யவலியுறுத்துவோம்.

- தாராள மயம், தனியார்மயம் என்று மேலாதிக்கம் செலுத்தும் வல்லரசுகளின் சுரண்டலை முறியடிக்க பிற பாட்டாளி சக்திகளோடு இணைந்துசிறுத்தைகள் போராடும்

- தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

- தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவோம்.

- இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவ மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு கிடைக்கப் பாடுபடுவோம்.

- தனித் தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை கொண்டு வரப் பாடுபடுவோம்.

- பெண்ணுரிமைக்கு முன்னுரிமை வழங்குவோம்.

- தமிழ் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருவோம்.

- தமிழக நதி நீர் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடுவோம்.

- ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போம்.

- மத வெறிகளின் சதிகளை முறியடிப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

புலி ஆதரவு பேச்சு: வழக்கு தள்ளுபடி

இதற்கிடேயே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திருமாவளவன் மீது வழக்கு தொடர காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், திருமாவளவன் பெல்ஜியம் நாட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கு நடந்த கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கைத் தமிழர்களுக்குமட்டும் தலைவர் அல்ல, தமிழ்நாட்டுக்கும் அவர்தான் தலைவர் என்று பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரன் தேடப்படும் குற்றவாளியாகவும்அறிவிக்கப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே பிரபாகரனை புகழ்ந்து பேசிய திருமாவளவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் விசாரித்து, இந்த மனு விசாரணைக்கே உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடிசெய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+