ஆரிய மாயையும், பரம்பரை எதிரியும்: ஜெவுக்கு கருணாநிதி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பரம்பரை எதிரி குறித்து அண்ணா ஆரிய மாயை என்ற நூலில் விலாவாயாககுறிப்பிட்டுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பதிலடி கொடுத்துள்ளார்.

பரம்பரை எதிரியான திமுகவை நாங்கள் தேர்தல் களத்தில் சந்திப்பது இதுவே கடைசிமுறையாக இருக்கும் என்று ஜெயலலிதா நேற்று பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறுகையில்,

திமுகவை தேர்தல் களத்தில் சந்திப்பது இதுவே கடைசி முறை என்று அவர்கூறியிருப்பது ஜெயலலிதாவின் பண்பாட்டைக் காட்டுகிறது.

பரம்பரை எதிரிகள் குறித்து ஆரிய மாயை என்ற பெயரில் பெரிய நூலாகவேஎழுதியுள்ளார் அண்ணா. அந்தப் புத்தகம் பல பதிப்புகளைக் கண்டது. எம்.ஜி.ஆரும்.அதை புதுப்பித்து வெளியிட்டார்.

அந்தப் புத்தகத்தில் பரம்பரை எதிரிகள் யார் என்பது குறித்து அண்ணா விரிவாகவேஎழுதியுள்ளார்.

நலத் திட்டங்களின் பலன்கள் மக்களுக்குக் கிடைக்காத வகையில் தேர்தல் ஆணையம்முட்டுக்கட்டை போடுவதாக ஜெயலலிதா கூறியுள்ள புகார்களுக்கு தேர்தல்ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகததில், சட்டம், அரசாங்கம், நீதித்துறைக்குஇடையே சிக்கி கல்வித்துறை இழுபட்டுக் கொண்டுள்ளது. நுழைவுத் தேர்வுக் குழப்பம்அதற்கு ஒரு சரியான உதாரணம்.

அதேபோல நிகர்நிலைப் பல்கலைக்கழகஙகளில் மாணவர்கள் குண்டர்களால்தாக்கப்படுகிறார்கள் என்பது கல்வித்துறை சீர்கெட்டுக் கிடப்பதையே காட்டுகிறது.

திமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில வெளியிடப்பட்டு விடும் என்றார்கருணாநிதி.

முன்னதாக தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட அதை பொதுச் செயலாளர்அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+