5,000 வாக்குச் சாடிகளில் மத்தியப் படைகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பதட்டம் நிறைந்த 5,000 வாக்குச் சாவடிகளில் மத்திய பாதுகாப்புபடையினரை நிறுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
தமிழத்தின் தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக மத்திய தலைமை தேர்தல்ஆணையாளர் டாண்டன், தேர்தல் ஆணையாளர்கள் நவீன் சாவ்லா, கோபால்சாமிஆகியோர் தமிழகம் வந்துள்ளனர். அதிகாரிகள், கலெக்டர்கள், காவல்துறை உயர்அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது வட மற்றும் தென் மாவட்டங்களில் தேர்தலின்போது வன்முறைகள்நிகழ்வதும், வாக்குச் சாவடிகள் கைப்பற்றபடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து இறுதியில் தமிழகத்தில் 5,000 மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் துணைராணுவம், மத்திய ரிசர்வ் படை போலீசாரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தத் வாக்குச் சாவடிகளில் கேமராக்களைக் கொண்டு கண்காணிக்கவும், வெளியேவீடியோ எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் கைதிகளைதேர்தலுக்கு முன் பிடித்து சிறையில் சிறையில் அடைக்கவும் போலீசாருக்கு தேர்தல்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications