சென்னை, மதுரை, கோவை டாக்டர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை :

முதுகலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியேவெளியானது தொடர்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களைச்சேர்ந்த 20க்கும் மேற்பட்ட டாக்டர்களின் வீடுகள், மருத்துவமனைகளில் இன்று சிபிஐஅதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான(எம்.டி, எம்.எஸ்) நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் முன் கூட்டியே வெளியானதாகசர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி சிபிஐயை மத்தியசுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த சில டாக்டர்களுக்கு தொடர்பு இருந்ததுதெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இன்று சம்பந்தப்பட்ட டாக்டர்கள் வீடுகள் மற்றும்கிளினிக்குகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல டாக்டர் உள்பட ஐந்து டாக்டர்களின் வீடுகள்மற்றும் கிளினிக்குகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல மதுரை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டடாக்டர்களின் வீடுகள், கிளினிக்குகளிலும் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

சென்னையில் நடந்த சோதனையில் செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், முக்கியஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதவிர நாடு முழுவதும் 35க்கும் மேற்பட்ட டாக்டர்களின் வீடுகள்,கிளினிக்குகளிலும் சோதனை நடந்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+