தாய், 2 தங்கைளை கொன்ற நவீனா பிடிபட்டார்
கரூர்:
காதல் தகராறு காரணமாக தாய், 2 தங்கைகளைக் கொலை செய்த கல்லூரி மாணவிநவீனா கைது செய்யப்பட்டார்.
கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த ஏட்டையா செல்வத்தின் மகள் நவீனா. கல்லூரிமாணவியான இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது தாய் ரூத்மேரி, தங்கைகள்ஸ்மைலி, அகிலாண்டேஸ்வரி ஆகியோரை கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.நேற்று ஏமூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நவீனாவை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் நவீனா கொடுத்த வாக்குமூலத்தில் "என்னையும் தந்தையையும்தொடர்புபடுத்தி தாயார் பேசி வந்தார். மேலும் காதலுக்கும் எதிர்பு தெரிவித்ததார்.இதனால் தான் அவரைக் கொன்றேன். அதைப் பார்த்துவிட்டதால் தங்கைகளையும்கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
நவீனாவிடம் கொலையை அவர் எப்படிச் செய்தார் என்பதை நடித்துக் காட்டுமாறுபோலீசார் கூறினர். இதையடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவீனா நடந்தசம்பவங்களை விளக்கியவாரே, எப்படி 3 கொலைகளையும் செய்தேன் என்பதையும்விளக்கினார்.
அது தொடர்பாக போலீசார் கூறியதாவது:
கரூர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரும் நவீனா உடன்படிக்கும் மாணவரான ராஜாமணி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இது வீட்டுக்கு தெரிய வரவே, ரூத்மேரி காதலை எதிர்த்துள்ளார். இதனால்ரூத்மேரிக்கும், நவீனாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
![]() |
ஞாயிரன்று இரவும் காதல் விவகாரம் தொடர்பாக தாய், மகள் இடையே பிரச்சனைவந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீனா நள்ளிரவு ஒரு மணியளிவில் தூங்கிகொண்டிருந்த தாய் ரூத்மேரியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார்.
கல் சரியாக படததால் ரூத்மேரி தலையை பிடித்துக்கொண்டு உக்கார்ந்திருக்கிறார்.கோபம் தனியாத நவீனா மீண்டும் கல்லை தலையில் தூக்கி போட்ட, சத்தமேஇல்லாமல் ரூத்மேரி இறந்துள்ளார்.
தாய் தானகவே தற்கொலை செய்து கொண்டார் என மற்றவர்கள் நினைக்க வேண்டும்என்பதற்காக ரூத்மேரியின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார்.
அதை முதல் தங்கை வினோதினி பார்த்துவிடவே அவரையும் அரிவாளால்வெட்டியுள்ளார் நவீனா.
ரத்தக் காயத்துடன் வீட்டின் பின்புறக் கதவு வழியாக வினோதினி தப்பி ஒடிவிட்டார்.
அப்போது மற்ற தங்கைகள் ஸ்மைலி, அகிலாண்டேஸ்வரி இருவரும் விழித்துக்கொண்டனர். அவர்களை இருவரையும் நவீனா நைசாக பேசி தண்ணீர் தொட்டி வரைஅழைத்துச் சென்று முதலில் அகிலாண்டேஸ்வரியையும், அதன்பின் ஸ்மைலியையும்தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி போட்டுள்ளார்.
இருவரும் தப்பி வெளியே வந்துவிடாமல் தடுக்க தொட்டியை மூடி அதன் மீது மரக்கட்டைகளை அடுக்கி தொட்டியை இறுகமாக மூடியுள்ளார்.
மூச்சத் திணறிய குழந்தைகள் இருவரும் சிறிது நேரத்திலேயே தண்ணீரில் முழ்கிஇறந்துவிட்டன.
எப்படி சிக்கினார் நவீனா?:
இந்தக் கொலையைச் செய்துவிட்டு தப்பிவிட்ட நவீனாவை பள்ளிபாளையம்போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆனாலும் அவர் சிக்காமல் இருந்தார்.
இந் நிலையில் இறந்த ரூத்மேரி, மற்றும் ஸ்மைலி, அகிலாண்டேஸ்வரியின் உடல்கள்சொந்த ஊராண ஸ்ரீமுஷ்ணத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது நவீனா தன் செல்போன் மூலம் தந்தைசெல்வத்திடம் பேசினார்.
உஷாரான போலீசார் நவீனாவின் காதலன் ராஜாமணி, மற்றும் அவரது 2 நண்பர்களைபோலீசார் ஸ்டேஷக்கு அழைத்து வந்தனர். ஸ்டேஷனில் இருந்தபடியே ராஜாமணியைசெல்போன் மூலம் நவீனாவிடம் பேச வைத்தனர்.
அதில் கிடைத்த செல்போன் டவர் சிக்னல் மூலம் ரயில் நிலையம் அருகே போலீசார்தீவிரமாகக் கண்காணித்னர்.
அப்போது ஏமூர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த நவீனா போலீசார் சுற்றிவளைத்தனர்.













Click it and Unblock the Notifications