எம்.டி, எம்.எஸ். வினாத்தாள் லீக்: 3 டாக்டர்கள் அதிரடி கைது!
சென்னை:
அகில இந்திய மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் மதுரை, புதுவையைச் சேர்ந்த 3 பிரபலடாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் நடத்தும் மருத்துவ மேற்படிப்புக்கானநுழைவுத் தேர்வில் வரலாறு காணாத வகையில் தமிழகத்திலிருந்து 421 பேர் பாஸ்செய்தனர்.இதனால் சந்தேகமடைந்த அகில இந்திய மருத்துவக் கழகம், சிபிஐ விசாரணைக்குஉத்தரவிட்டது. இந்த விசாரணையில், வினாத்தாள் முன் கூட்டியே வெளியான விவரம்தெரிய வந்தது.
தமிழகத்திலிருந்துதான் வினாத்தாள் லீக் ஆனதும் தெரிய வந்தது. இதில் டாக்டர்கள்பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தக்கஆதாரங்களை சேகரித்த சிபிஐ நேற்று தமிழகம் மற்றும் நாடு முழுவதும் தீவிரசோதனையில் ஈடுபட்டது.
சென்னை, மதுரை, தஞ்சை, புதுவை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டடாக்டர்களின் வீடுகள், மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின் முடிவில் புதுவையைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள்,மதுரையைச் சேர்ந்த ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டனர். மேலும் 22 டாக்டர்கள் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து வினாத்தாளைப் பெற ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரைமாணவர்கள் பணம் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில்மேலும் சில டாக்டர்கள் கைது செய்யப்படக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications