ஜெ. பிரசாரம் நாளை தொடக்கம்!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தனதுபிரசாரத்தைத் தொடங்குகிறார்.
சைதை தொகுதியின் அதிமுக வேட்பாளர் செந்தமிழனுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கிறார். பஸ் நிலையம் அருகே உள்ள இளங்காளியம்மன் கோவிலிலிருந்துதனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா.வேனில் இருந்தபடி வாக்கு சேகரிக்கும் ஜெயலலிதா கிண்டி வழியாக ஆலந்தூர்செல்கிறார். ஆலந்தூரில் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்புக்கு அதிமுகவினர்ஏற்பாடு செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். சிலை அருகே நடக்கும் பிரசாரத்தின்போது, ஆலந்தூர் தொகுதி அதிமுகவேட்பாளரான அமைச்சர் வளர்மதிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து பல்லவாரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் வளர்மதிக்குஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
பின்னர் தாம்பரம் செல்லும் ஜெயலலிதா, அங்கு மதிமுக வேட்பாளர் பாலவாக்கம்சோமுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். தைத் தொடர்ந்து செங்கல்பட்டில் இரவுநடக்கும் பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்துக்கு வாக்குசேகரிக்கிறார்.
பின்னர் மதுராந்தகம், திண்டிவனம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்கள்அப்பாதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
விழுப்புரத்தில் தனது முதல் நாள் பிரசாரத்தை ஜெயலலிதா முடிக்கிறார். தொடர்ந்துஒரு மாதத்திற்கும் மேலாக ஜெயலலிதா பிரசாரம் செய்து அதிமுக, கூட்டணிக் கட்சிவேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications