முஸ்லீம் கட்சியை கலக்கிய எஸ்எம்எஸ்!
சேலம்:
அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின்ஆலோசனைக் கூட்டத்தில், படையெடுத்து வந்த எஸ்.எம்.எஸ். வதந்திகளால் கூட்டம்முழுவதும் பரபரப்பாக இருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற கட்சி அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. சட்டசபைத் தேர்தல் பிரசார உத்திகள் குறித்து விவாதிக்க சேலத்தில் இந்தக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் பேசிய தலைவர்கள், நம்மைப் பற்றி எதிரிகள் அர்த்தமற்ற வதந்திகளைபரப்புவார்கள். எனவே அதுகுறித்து கட்சியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்என்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது நிர்வாகி ஒருவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். செய்தி ஒன்று வந்தது.அதில், அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைக்கிறது என்று செய்தி வந்தது.
இதுகுறித்து மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகளுக்கு அவர் தெரிவிக்கவேகூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுடன் நாம்எப்படி கூட்டணி வைக்க முடியும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்முனுமுனுத்தனர்.
இதைப் பார்த்த நிர்வாகி ஒருவர் எழுந்து மைக்கைப் பிடித்து,
பார்த்தீர்களா, இப்போதுதான் வதந்திகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.அதற்குள் எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி கிளம்பி விட்டது. இவையெல்லாம் நம்மைகுழப்ப எதிரிகள் மேற்கொள்ளும் சதி வேலை. இதைப் பார்த்து ஏமாந்து விடக் கூடாது,உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து இதே ரீதியில் மேலும் சில எஸ்.எம்.எஸ். செய்திகள் வந்ததால், கூட்டம்முழுவதும் பரபரப்பு நீடித்துக் கொண்டிருந்தது.












Click it and Unblock the Notifications