அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் பொன்னையன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை :

அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பொன்னையன், தீவிரஅரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாக கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தபொன்னையனை, முதல்வர் ஜெயலலிதா தான் தீவிர அரசியலுக்குக் கொண்டு வந்தார்.நிதியமைச்சர் பொறுப்புடன், அதிமுக அவைத் தலைவர் பதவியும் அவருக்குதரப்பட்டது.

முதல்வரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கி வந்த பொன்னையனைமன்னார்குடி வகையறா பொறாமையுடன் பார்த்து வந்தது. தங்களுக்கு இணையானஅதிகாரத்துடன் பொன்னையன் வலம் வருவதை விரும்பாத அவர்கள் ஆப்பு வைக்ககாத்திருந்தனர்.

இந் நிலையில் சிறுசேரி நில விவகாரத்தில் பொன்னையனுக்கும் ஜெயலலிதாவுக்கும்இடையே மோதல் உருவானது.

அதைத் தொடர்ந்து பொன்னையனுக்கு எதிராக மளமளவென காய் நகர்த்தி அவரைஓரம்கட்டிவிட்டனர் மன்னார்குடியினர்.

அதிமுக ஆட்சி நிறைவுக்கு வரும் நிலையில் ஜெயலலிதாவின் நம்பிக்கையை இழந்தபொன்னையனிடம் இருந்து அவைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. கட்சியிலும்அவருக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

ஆளுநர்-ஜெ இடையே மோதல் நிலவுவதால் பொன்னையனின் அமைச்சர்பதவியைப் பறிக்கக் கூட ஆளுநர் மாளிகைக்குச் செல்ல ஜெயலலிதாவிரும்பவில்லை. இதனால் அந்தப் பதவி மட்டும் தப்பியுள்ளது.

ஆனாலும் அவருக்கு எந்தவிதமான கோப்புகளும் அனுப்பப்படுவதில்லை என்றுகூறப்படுகிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, வரும் சட்டசபைத் தேர்தலில் பொன்னையனுக்கு சீட்மறுக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது முதலே பொன்னையன் அரசியலிலிருந்துஒதுங்கி இருந்து வருகிறார். இந் நிலையில் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக தீவிர அரசியலிலிருந்துஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளேன். இதன் காரணமாகவே எனது அவைத் தலைவர்பதவியை ராஜினாமா செய்தேன்.

தீவிர அரசியலிலிருந்து விலகினாலும் கூட பொது வாழ்க்கையிலிருந்து நான் விலகப்போவதில்லை. எனது அவைத் தலைவர் பதவி பறிக்கப்படவில்லை.

முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.ஜெயலலிதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால்தான் எனது பதவி பறிக்கப்பட்டதாககூறப்படுவதில் உண்மை இல்லை.

இது எதிர்க்கட்சியினர் வேண்டும் என்றே பரப்பி வரும் வதந்திகள்.

முதல்வரின் ஆசியும், ஆதரவும் இருக்கிற காரணத்தால்தான் இன்னும் நிதித்துறைஉள்ளிட்ட முக்கியத் துறைகள் என்னிடமே தொடர்ந்து இருந்து வருகின்றன.

வரும் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சிஅமைப்பார். பெண்களின் ஓட்டுக்கள் அவருக்குத்தான் கிடைக்கும். எனக்கு அவகாசம்கிடைத்தால் பிரசாரம் செய்வேன் என்று கூறினார் பொன்னையன்.

அனுமதி கிடைத்தால் என்பதைத் தான் தனது பாஷையில் அவகாசம் கிடைத்தால்என்று பொன்னையன் கூறுகிறார் போலும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+