பொடாவில் கைதான 4 பேருக்கு "சீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடாவில் வைகோவுடன் சிறையில் இருந்த 4 பேருக்கு தேர்தலில் போட்டியிடவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் நேற்று மதிமுகவுக்கு 35 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுசு"செயலாளர் வைகோவேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் விடுதலைபுலிகளை ஆதரித்து பேசியதற்காகபொடாவில் வைகோ கைது செய்யப்பட்டார். அவருடன் புலவர் செவந்தியப்பன்,கணேசமூர்த்தி, பூமிநாதன், வீர. இளவரசன் ஆகியோரும் இருந்தனர்.

இவர்கள் நால்வரும் கட்சியில் மாவட்ட செயலாளர் பதவிகள் வகித்து வந்தனர்.தற்போது இவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் சிறையில் இருந்த மதுரை கணேசன், மணியன், அழகு சுந்தரம்,நாகராஜன் ஆகியோருக்கு போட்டியிடும் வாயப்பு வழங்கப்படவில்லை.

புலவர் செவந்தியப்பன் சிவகங்கை தொகுதியிலும், கணேசமூர்த்தி வெள்ளகோவில்தொகுதியிலும், வீர இளவரசன் திருமங்கலம் தொகுதியிலும், பூமிநாதன் மதுரைகிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் இவர்கள் தவிர கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் 13 மாவட்டசெயலாளர்கள், ஒரு நகர செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிமாறன்,காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்சோமு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், கன்னியாகுமரி மாவட்டசெயலாளர் ரத்தினராஜ்,

திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன், கரூர் மாவட்ட செயலாளர் ராமசாமி,நாகை மாவட்ட செயலாளர் மகாலிங்கம், சேலம் மாவட்ட செயலாளர்தாமரைக்ண்ணன்,

நாமக்கல் மாவட்ட செயலாளர் குருசாமி, தர்மபுரி மாவட்ட செயலாளர் சம்பத்,விழுப்புரம் மாவட்ட செயலாளர் டாக்டர் மாசிலா மணி, தேனிமாவட்ட செயலாளர்ராமகிருஷ்ணன்,

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் ஆகியோருக்கு வாயப்புகள்வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர் செயலாளர் மலரவனுக்கும் வாய்ப்புவழங்கப்பட்டுள்ளது.

இதில் புலவர் செவந்தியப்பன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், கணேசமூர்த்திஈரோடு மாவட்ட செயலாளராகவும், வீர இளவரசன் மதுரை புறநகர் மாவட்டசெயலாளராகவும், பூமிநாதன் மதுரை மாநகர் செயலாளர்களாகவும் உள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவகாசியில் தொகுதியில் தீர்மானக்குழு உறுப்பினர்ஞானதாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அதே போல விருதுநகர் தொகுதியில் மாவட்டசெயலாளர் சண்முகசுந்தரம் நிற்பதாகவே இருந்தது.

நாடார் பேரவையினர் விருதுநகர் நகரில் போட்டியிடயிருப்பதால் வெற்றி வாய்ப்புபாதிக்கும் என கருதிய சண்முக சுந்தரம் விருதுநகரில் நிற்காமல் வாபாஸ்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது விருதுநகரில் பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+