பெரியாறு விவசாயிகள் தொடர் போராட்டம்
மதுரை:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தும் வரைதொடர்ந்து போராட்டங்கள் நடத்தப் போவதாக பெரியாறு-வைகை பாசனப்பகுதிவிவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டித்துமதுரையில் பெரியாறு-வைகை பாசனப் பகுதி விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம்நடந்தது.இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிர்வாகி அப்பாஸ் கூறுகையில்,
பெரியாறு அணையின் உண்மையான உயரம் 152 அடியாகும். ஆனால் கேரள அரசுஇதை தற்போது 136 அடியாக குறைத்து வைத்துள்ளது. இந்த உயரத்தை 142 அடியாகஉயர்த்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதை மதிக்காமல் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது கேரள அரசு. இந்தசட்டத் திருத்தத்திற்கு அம் மாநில ஆளுனரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல்அளிக்கக் கூடாது என்று கோரி தந்திகள் அனுப்பியுள்ளோம்.
பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தும் வரை தொடர்ந்து பல்வேறுவழிகளில் போராட முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications