கலர் டிவி வேணுமா?: திமுகவுக்கு ஓட்டு போடுங்க
சென்னை:
திமுகவை ஒழித்து விடுவேன் என்று சொன்னவர்களை எல்லாம் கருணாநிதி கல்லரைகட்டியுள்ளார் என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசினார்.
சென்னை தி.நகர் 120 வட்ட திமுக சார்பில் கோடம்பாக்கம் காமராஜர் காலனியில்தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நெல்லிக்குப்பம் புகழேந்திபேசியதாவது:இன்று அமாவாசை, அடுத்த அமாவாசக்ைகு நாங்கள் ஆட்சியில் இருப்போம். ஏழைமக்களுக்கு கலர் டிவி கொடுப்போம் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால்ஜெயலலிதாவோ கேபிள் டிவிக்கு தடைபோடுவோம் என்கிறார்.
கலர் டி.வியில் புதுசு, புதுசாக நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்றால் திமுகவுக்குஒட்டுப்போடுங்கள். (ஓட்டு கேட்க என்னவெல்லாம் காரணம் சொல்றாங்கப்பா)
எனது பரம்பரை விரோதி கருணாநிதி என்று ஜெயலலிதா சொல்கிறார். திமுகவைஒழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் கல்லரை கட்டியவர்கருணாநிதி.
ஜெயலலிதாவிடம் போய்சேர்ந்தவர்கள் எல்லாம் உருப்படியாக இருந்தது இல்லை.அவரது ஜாதகம் அப்படி. ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து கீழே இறக்குவேன்என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக வைகோ கத்தினார்.
பாண்டிச்சேரியில் சனி பகவான் உள்ள திருநள்ளாறு தொகுதியை வைகோவுக்குஒதுக்கியிருக்கிறார். இதில் இருந்தே ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள்தெரிந்து கொள்ளலாம்.
சாமிகளுக்கு கிடா வெட்டி படையல் போடக் கூடாது என்று ஜெயலலிதா தடைபோட்டார். நல்ல நேரத்தில் எம்பி தேர்தல் வந்தது. ஜெயலலிதா தோல்வியடைந்தார்.கிடா வெட்டக்கூடாது என்று போட்ட தடையை நீக்கினார்.
தெய்வ குத்தத்திற்கு ஜெயலலிதா ஆளாகியுள்ளார். சாமிகளை பட்டினி போட்டஜெயலலிதா ஆட்சிக்கு வர முடியாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications