மக்களை மயக்கும் திமுக-அதிமுக: விஜய்காந்த்
சென்னை:
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழகங்களும் மக்களை மயக்கும் வகையில் தேர்தல்அறிக்கையில் மாறி மாறி சலுகைகளை அறிவித்துள்ளன என தேமுதிக தலைவர்விஜய்காந்த் கூறினார்.
ந140 பேர் வேட்பாளர் பட்டிலை வெளியிட்டு விஜயகாந்த் பேசியதாவது:கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பார்த்சாரதி திருவள்ளூர் தொகுதியிலும்,பொருளாளர் சுந்தர்ராஜன் மதுரை மத்திய தொகுதியிலும், தலைமை கழக செயலாளர்முருகேசன் உத்திர மேரூர் தொகுதியிலும், கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார்ஈரோடு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.மக்களிடம் ஒரு மாயதோற்றத்தை உருவாக்கும் வகையில் திமுக, அதிமுக இரண்டும்தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் ரூ. 2க்கு அரிசி கொடுப்போம் என்றுசொல்லியிருப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை. இதை கடந்தஆட்சியிலேயே கொண்டு வந்திருக்கலாம்.
கலர் டி.வி. கொடுப்பதாக திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது. இரண்டு கழகங்களும்மக்களை மயக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் மாறி மாறி சலுகைகளைஅறிவித்துள்ளன.
தேமுதிகவுக்கு நீங்கள் ஒட்டுப்போட்டால் ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடிவரும். ஏழை எளிய மக்கள் படிக்கும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.
இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி ஒட்டுப்போட்டு விட்டார்கள். மக்கள் மாற்றத்தைவிரும்புகிறார்கள். மக்களின் எண்ண ஒட்டத்தை தேர்தலில் பார்க்கலாம்.
விஜயகாந்த் வேன் பறிமுதல்:இதற்கிடையே தேர்தல் விதிமுறையை மீறும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைகட்டிக் கொண்டு சென்ற, நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான மாருதி வேனைபுதுவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நடிகர் விஜயகாந்த் நேற்று புதுவையில் பிரசாரம் மேற்கொண்டார். அவரது பிரசாரஊர்வலத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிககள் கட்டப்பட்ட, மாருதி வேனும்இடம்பெற்றிருந்தது.
லாஸ்பேட்டை பகுதியில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது இந்த மாருதிவேனும் பிரசாரக் கூட்டத்தில் நின்றிருந்தது.
அப்போது, தேர்தல் விதியை மீறும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மற்றும்ஆம்ப்ளிபயர் இருந்ததால் வேனை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுச்சென்றுவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications