1 பெண்ணுக்கு உரிமை கொண்டாடும் 2 கணவர்கள்
சென்னை:
ஒரே பெண்ணை தங்கள் மனைவி என்று சொந்தம் கொண்டாடிய இருவர் வழக்குதொடர்ந்ததால் குடும்ப நல கோர்ட்டில் நிவாரணம் தேடிக் கொள்ளுமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது:நான் வெல்டிங் வேலை செய்கிறேன், பக்கத்து வீட்டு பெண் சங்கரியும் நானும்காதலித்தோம். இது அவளது பெற்றோர்க்கு பிடிக்காததாதல் பிரான்சில் உள்ளஉறவினர் வீட்டுக்கு ஏமாற்றி அவளை அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து என்னிடம் பலமுறை சங்கரி தொலைபேசியில் பேசினார். பிப்ரவரி 19ம்தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசியசங்கரி, என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
நான் சங்கரியை எனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டேன். கடலூர் பதிவுத்துறை அலுவலகத்தில் பிப்ரவரி 20ல் திருமணம் செய்துகொண்டோம்.
![]() |
| சரவணனுடன் சங்கரி திருமண கோலத்தில் |
பிப்ரவரி 23ல், சங்கரியின் உறவினர் ரவி என்பவர் அடியாட்களுடன் வந்து சங்கரியின்கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து எறிந்து விட்டு என மனைவியை கடத்தி சென்றுவிட்டனர்.
சங்கரியை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர். சங்கரியை கண்டுபிடித்துஎன்னிடம் ஒப்படைக்வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதி மன்றம் சங்கரியை ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் முன்பு இவ்வழக்கு நேற்று முன்தினம்விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் அபுடுகுமார் ஆஜராகி, பிரான்சில் இருந்து மனுதாரர்ராஜமூர்த்தியின் மனைவி என்ற பெயரில் ஒரு கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
பிறகு அவர் வாதடுகையில், "சங்கரி ஏற்கனவே 2002ல் ராஜமூர்த்தி என்பவரைதிருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடன் பிரான்சில் இருந்த குடும்பம்நடத்துகிறார். அவரை யாரும் கடத்தவில்லை. அவர் விருப்பத்துடன் தான் அங்குஉள்ளார் என்றார்.
சரவணின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், சங்கரி கடலூரில் உறவினர் வீட்டில்தான்உள்ளார் எனறார்.
இதை கேட்ட நீதிபதிகள், ஒரு பெண்ணுக்கு 2 பேர் கணவர் என்று கூறி சொந்தம்கொண்டாடுவதால் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உரிய நிவாரணம்பெறலாம் என்று தீப்பளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications