அமைச்சர் இன்பாவுக்கு உயர்நீதிமன்றம் "சூடு
சென்னை:
பெண் பஞ்சாயத்து தலைவரை அதிகார வரம்பை மீறி நீக்கிய தமிழக அமைச்சர்இன்பத் தமிழனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர்சீனியம்மாள். இவர் மீது பஞ்சாயத்துக் கூட்டத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்கொண்டு வரப்பட்டு பின்னர் அவர் நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்டவருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்திருந்தார்.இந்த நீக்கத்தை எதிர்த்து சீனியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமானஇன்பத் தமிழன் கடந்த 2001ம் ஆண்டு முதல் என் மீது துவேஷத்துடன் செயல்பட்டுவந்தார்.
தான் கூறும் ஆட்களுக்கே பஞ்சாயத்து யூனியன் ஒப்பந்தங்களைத் தர வேண்டும் எனவற்புறுத்தினார். அதற்கு நான் மறுக்கவே என்னைப் பழிவாங்கும் விதமாகஉறுப்பினர்களைத் தூண்டி விட்டு என் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரச் செய்தார். இதைத் தொடர்ந்து நான் பதவி நீக்கம் செய்யப்பட்டேன்.
அமைச்சர் இன்பத் தமிழனின் தூண்டுதலின்பேரிலேயே எனது பதவிபறிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மாராவ், அமைச்சர் இன்பத் தமிழன் அதிகாரவரம்பை மீறி, ஜனநாயக நெறிறைகளை சீர்குலைக்கும் விதமாகசெயல்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, அமைச்சர் இன்பத் தமிழனின்செயல்பாடுகள் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமாக அவர்செயல்பட்டுள்ளார். சீனியம்மாளை பதவியிலிருந்து நீக்கியது செல்லாது. இந்தவிவகாரத்தில் அமைச்சர் இன்பத் தமிழன் தலையீடு அதிக அளவில் இருந்திருப்பதுஆவணங்களைப் பரிசீலித்துப் பார்க்கையில் தெளிவாகத் தெரிகிறது.
அவர்தான் உறுப்பினர்களைத் தூண்டி, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரச்செய்து, பின்னர் அதன் அடிப்படையில் கோட்டாட்சியர் பதவி நீக்கம் செய்துஉத்தரவிட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, பொறுப்பான அமைச்சர் பதவியில் உள்ளஒருவர் இதுபோல செயல்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, அனுமதிக்கவும்கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படடவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குரியமரியாதையை அளித்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாககுறிப்பிட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கு அநீதிஇழைக்கப்பட்டுள்ளது, அவரது மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது என்றுதீர்ப்பில் நீதிபதி தர்மாராவ் குறிப்பிட்டுள்ளார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications