அமைச்சரின் எளிமை; வாக்காளர்கள் பெருமை!
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் கருப்பசாமியின் எளிமைதான், தொகுதி வாக்காளர்களின்தற்போதைய லேட்டஸ்ட் பேச்சாக இருக்கிறது.
ஆட்டம், பாட்டம் என ஆரவாரமாக இருப்பதுதான் தமிழக அரசியல்வாதிகள்,அமைச்சர்களின் வாடிக்கை. ரொம்ப அரிதாக, சிலர் எளிமையாக, சத்தம்போடாமல்செயலாற்றி வருவார்கள். அந்த வரிசையில் அமைச்சர் கருப்பசாமியை சேர்க்கலாம்.ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருப்பவர் கருப்பசாமி. ரொம்பவும்எளிமையானவர். சாதாரண செருப்புதான் போடுவார். ஆடம்பரமாக செலவுகள்செய்ய மாட்டார் என இவரைப் பற்றி அதிமுகவினரும், தொகுதி மக்களும்பெருமையாக கூறுகின்றனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பசாமி, சங்கரன்கோவில் (தனி) தொகுதியில்அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். புரட்சிப் புயல் வைகோ,சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட தனது சொந்த ஊரானகலிங்கப்பட்டியிலிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்கினார்.
பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட கருப்பசாமி, செருப்பு கூட போடாமல்மேடையில் நின்றிருந்தார். சாதாரண சட்டை, வேட்டியில் படு எளிமையாக இருந்தகருப்பசாமியைப் பார்த்து தொகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், பெருமையுடனும்பேசிக் கொண்டனர்.
கருப்பசாமி மட்டும் எளிமையானவர் இல்லை. அவரது குடும்பத்தினரும் அப்படியேதான் உள்ளனர். மகன் அமைச்சராயிற்றே என்று சும்மா உட்காராமல், வயல் வேலைபார்த்து வருகிறார்கள் கருப்பசாமியின் பெற்றோர்.
கருப்பசாமி எளிமையான மனிதர் மட்டுமல்ல, நல்ல பாடகர் என்பதும் பலருக்குதெரியாது. எம்ஜிஆர் படப் பாடல்களை மட்டுமே பாடும் கருப்பசாமி, 1996ம் ஆண்டுதேர்தலில் அதிமுக தமிழகம் முழுவதும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தபோதும்,சங்கரன்கோவில் தொகுதியில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுசாதனை படைதார்.
பந்தா, ஜபர்தஸ்து, அடாவடி, அட்டகாசம் என அரசியல்வாதிகளுக்கே உரிய எந்தவிதஇலக்கணம் இல்லாத சிம்பிள் மனிதர் கருப்பசாமி என்று தொகுதி மக்கள்பெருமையாக கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட எளிமையான கருப்பசாமியை ஆதரித்து வைகோ பிரசாரம்செய்தபோது கருப்பசாமியை வெகுவாக புகழ்ந்தார். இதனால் கூச்சத்தில் வளைந்து,நெளிந்தார் கருப்பசாமி.
இப்படியும் சில அரசியல்வாதிகள்!
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications