அதிமுகவுக்கு தாவிய பாமக கொ.ப.செ!
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் புலவர் நல்லியகோடன்,முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
உளவுத்துறையின் பின்னணி ஆபரேசனுக்கு மத்தியில் பாமகவைச் சேர்ந்த 4எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போதுபாமக கொள்கை பரப்புச் செயலாளர் புலவர் நல்லியகோடனும் தற்போதுஅதிமுகவில் இணைந்து விட்டார்.கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனைஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போதுஜெயலலிதாவை சந்தித்த நல்லியகோடன் அவர் முன்னிலையில் அதிமுகவில் தன்னைஇணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் இணைந்த நல்லியகோடன், அதிமுகவின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரம்செய்யவிருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications