அண்ணா பல்கலை துணைவேந்தர் மீது வழக்கு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வாதன் இரட்டைப் பதவி வகித்துவருவதாகவும், ஒரு பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரியும்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இரட்டைப் பதவி பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஊதியத்துடன் கூடிய இரு பதவிகளைவகிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ளமனுவில்,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கும் டி.விஸ்வநாதன், அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலின் தென் மண்டலத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இதன்மூலம் அரசு ஊதியம் பெறக் கூடிய இரு பதவிகளை அவர் வகிக்கிறார்.
எனவே பல்கலைக்கழக துணைவேந்தர் அல்லது அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சிலின் தென் மண்டலத் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அகில இந்தியத் தொழில்நுட்பக்கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications