வைகோ மன்னிப்பு கேட்க தயாநிதி நோட்டீஸ்
சென்னை:
தன்னைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோபகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வைகோ, திமுகவை கடுமையாகத் தாக்கிப்பேசி வருகிறார். குறிப்பாக சன் டிவி குறித்து அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துப் பிரசாரம் செய்து வருகிறார்.சன் டிவி தொடர்பான அவரது குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
இந் நிலையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்வைகோவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் வைகோவின் பேட்டியை ஒளிபரப்பிய தினமலர் நாளிதழுக்கும் ஜெயாடிவிக்கும் தயாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். விளம்பரங்களை தருவது தொடர்பாகஅபாண்டமாக என் மீது புகார் கூறியுள்ளார் வைகோ.
ஆனால் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
ஜெயா டிவிக்கு டெலிபோர்ட் வசதியைத் தர எனது அமைச்சகம் தாமதம் செய்துவருவதாக இன்னொரு புகார் கூறியுள்ளார்.
டெலிபோர்ட் வசதிக்கான அனுமதியைத் தர உயர்நீதிமன்றம் கால அவகாசம் விதித்துஉத்தரவிட்டுள்ளதை அவர் மறந்து பேசியுள்ளார்.
ராஜ் டிவி விவகாரத்தைப் பொருத்தவரை, அது உரிமம் இல்லாமல் நகழ்ச்சிகளைஒளிபரப்பியது குற்றம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.
அப்படி இருக்கையில் எனது தலையீட்டின் பேரில் ராஜ் டிவியின் நிகழ்ச்சிகள்முடக்கப்பட்டதாக வைகோ கூறுவது அபாண்டமான, அப்பட்டமான பொய்.
இப்படி என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் வைகோதிங்கள்கிழமைக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால், வைகோ, தினமலர், ஜெயா டிவி ஆகியோர் தலா ரூ. 1 கோடி மானநஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications