284 தேர்தல் பார்வையாளர்கள் வருகை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 284 தேர்தல் பார்வையாளர்களும்விரைவில் தமிழகம் வரவுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி 284 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல்ஆணையம் நியமித்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளர் போக,வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை பார்வையிட 50 பார்வையாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 20ம் தேதிக்குள் இந்தப் பார்வையாளர்கள் அனைவரும் தங்களுக்குஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று பணியை ஆரம்பிப்பார்கள். வேட்பாளர்களின்தேர்தல் செலவுக் கணக்கை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொருபார்வையாளரும் 5 முதல் 6 தொகுதிகளைக் கண்காணிப்பார்கள்.
தேர்தல் பார்வையாளர்களுக்கு பல்வேறு கூடுதல் அதிகாரங்களும்வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக ஏதாவது தகவல்அனுப்ப வேண்டும் என்றால், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின்அனுமதியின்றி தலைமைத் தேர்தல் ஆணையருக்கே இவர்கள் அறிக்கைகளைஅனுப்ப முடியும்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 13ம் தேதிதொடங்குகிறது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications