தனித்துப் போட்டி: டி.ராஜேந்தர் அறிவிப்பு
சென்னை:
அதிமுக கூட்டணியில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாகவெளியேற்றப்பட்ட லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தனது கட்சி தனித்துப்போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை மிகத் தீவிரமாக ஆதரித்துப் பேசி வந்த விஜய டி.ராஜேந்தருக்குஅதிமுகவில் குறைந்தது ஒரு சீட்டாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சீட்டேகொடுக்காமல் சீட்டிங் செய்து விட்டது அதிமுக.இதனால் நொந்து போன ராஜேந்தர் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தனதுகட்சியினருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். தமிழக சமாஜ்வாடிக் கட்சியின்தலைவரும் இந்தியன் வங்கியின் மாஜி சேர்மனுமான கோபலகிருஷ்ணன்உள்ளிட்டவர்களை சந்தித்து கூட்டணி அமைப்போமோ என்று பேசிப் பார்த்தார்.
ஆனால், டி.ராஜேந்தர் என்ற உடனயே ஒதுங்கி ஓடிவிட்டனர் பெரும்பாலோனார்.
இதையடுத்து நேற்று தனது கட்சியின் பொதுக் குழுவையும் கூட்டி ஆலோசித்தார்.இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று செய்தியாளர்களைச்சந்தித்து விளக்கினார் ராஜேந்தர்.
அவர் கூறுகையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அதிமுகவுக்கு தீவிரமாகஆதரவு தெரிவித்து வந்தது லட்சிய திமுக. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும்,இடைத் தேர்தலின்போதும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன்.
ஆனால் வருகிற சட்டசபைத் தேர்தலில் நாங்கள் கேட்ட தொகுதிகளை கொடுக்கஅதிமுக முன் வராததாலும், எங்களது சுய மரியாதைக்கு பங்கம் ஏற்படும் வகையில்தொகுதிகளை ஒதுக்கியதாலும் (அப்படியா?), நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளோம்.
எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கிறேன்.திமுக கூட்டணியில் மதிமகவுக்கு 22 தொகுதிகள் கொடுப்பதாக கலைஞர் கூறினார்.ஆனால் 23 தொகுதிகளைக் கேட்டார் வைகோ.
ஒரு தொகுதி கிடைக்கவில்லை என்பதற்காக மாற்று அணிக்கு மாறிய வைகோ, ஏசுநாதரின் 13வது சீடர் ஏசுவைக் காட்டிக் கொடுத்தது போல.
13 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கிறது என்பதற்காக திமுகவை காட்டிக் கொடுத்து விட்டுமாற்று அணிக்குப் போய் விட்டார். ப்படிப்பட்டவர் உள்ள அணியில் இடம் பெறுவதுஎங்களுக்குப் பொருத்தமானதாக இருக்காது என்பதும் நாங்கள் அந்த அணியில் இடம்பெறாததற்கு ஒரு காரணம் என்றார் ராஜேந்தர். (அடடா, என்ன ஒரு காரணம்)
அடித்தார் அந்தர் பல்டி:
தனது கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் ராஜேந்தர்பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி எனது அரசியல் குரு. என்னை கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்தவர்.
எனவே அவரை எதிர்த்துப் போட்டியிட மாட்டேன். அதேபோல முதல்வர்ஜெயலலிதா மீது மரியாதை வைத்துள்ளேன். அவரையும் எதிர்த்துப் போட்டியிடமாட்டேன் என்றார்.
கருணாநிதியை குண்டக்கமண்டக்க தாக்கிப் பேசி வந்த டி.ரஜேந்தரிடம் இப்போது நேற்று இல்லாத மாற்றம்தென்படத் தொடங்கியுள்ளது. கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்...?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications