தமிழ்நாட்டை சீனாவாக்குவேன்: விஜயகாந்த்!
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை சீனா,அமெரிக்கா, ரஷ்யா போல மாற்றிக் காட்டுவேன் என்று நடிகர் விஜயகாந்த்கூறியுள்ளார்.
தே.மு.தி.க சார்பில் சென்னை அருகே தாம்பரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர்பேசுகையில்,2 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்குத் தருவதாக திமுக கூறுகிறது. அப்படி நிலம்கொடுக்கும்போது பம்புசெட்டு போட்டுத் தருவார்களா, போடாமல் தருவார்களாஎன்பதை திமுக விளக்க வேண்டும். (அதில் இருக்கும் தண்ணி நல்ல தண்ணியா,உப்புத் தண்ணியாக இருக்குமா என்று கேட்காமல் விட்டாரே)
2 ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுப்போம் என்று இன்னொரு வாக்குறுதி. ஏன்முந்தைய ஆட்சியின்போதே திமுகவினர் இதை கொடுத்திருக்கலாமே, அப்போது ஏன்கொடுக்கவில்லை? எல்லாம் மக்களை ஏமாற்றும் அறிக்கைகள்.
வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாத்தான் நான் பேசுவேன். என்னை யாரும் மிரட்டமுடியாது. பயப்பட மாட்டேன். (இதை அடிக்கடி சொல்றதைப் பார்த்தா...).
முடியாது என்ற வார்த்தை முட்டாளுக்குச் சொந்தம், முடியும் என்பது அறிவாளிக்குச்சொந்தம்.
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை, சீனா, அமெரிக்கா, ரஷியா (சோவியத்யூனியன் மாதிரியா? இல்ல இப்போ இருக்குற ரஷ்யா மாதிரியா?) போல மாற்றிக்காட்டுவேன்.
காலையில் பசியோடு எழுபவர்கள், இரவில் தூங்கப் போகும் போது பசியாறி விட்டுத்தூங்கும் நிலைக்கு (அப்ப காலை, மதிய சாப்பாடு?) தமிழக மக்களை மாற்றுவேன்.
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பேசினார் விஜயகாந்த்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications