திமுகவுக்கு காங்கிரஸ் நோஸ்-கட் !
டெல்லி:
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை ஏற்க வேண்டும் என்ற அவசியம்,நிர்ப்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கிலோ அரிசி 2 ரூபாய்க்குத் தரப்படும்,வீட்டுக்கு வீடு இலவசமாக கலர் டிவி தரப்படும், ஒவ்வொரு வீட்டுக்கும் சமையலஎரிவாயு அடுப்பு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்புகளை கிண்டலடித்து வைகோ பிரசாரம் செய்து வருகிறார். தமிழகம்முழுவதும் திமுகவின் திட்டங்கள் விவாதப் பொருளாகியுள்ளன.
இதுகுறித்து கருணாநிதி விளக்கமளிக்கையில், அரிசிக்கு மத்திய அரசு தரும் மானியஉதவியை அதிகரித்தால் 2 ரூபாய்க்கு கிலோ அரிசி தருவது சாத்தியம்தான் என்றுகூறியிருந்தார்.
இதனால் திமுகவின் அறிவிப்புக்குப் பின்னணியில் மத்திய அரசும் உள்ளதோ என்றஐயப்பாடு எழுந்துள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்தித் தொடசர்பாளர்அபிஷேக் சிங்வி கூறுகையில்,
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றுக்கும், காங்கிரஸுக்கும் தொடர்புஇல்லை. அவற்றை நாங்கள் ஏற்க வேண்டிய அவசியமும், நிர்பந்தமும் இல்லை.அதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இல்லை.
மத்திய கூட்டணியில் திமுக பங்கேற்றிருந்தாலும் கூட திமுகவின் அனைத்துக்கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
திமுக கொடுத்துள்ள வாக்குறுதியை திமுகதான் நிறைவேற்ற வேண்டும் என்றார்சிங்வி.
சில வாரங்களுக்கு முன் மத்திய அரசுக் கூட்டணியில் வைகோ நீடிப்பார், இந்தவிஷயத்தில் கருணாநிதியின் நெருக்குதலுக்கு காங்கிரஸ் அடிபணியாது என்று பேசி,சோனியாவிடம் வறுபட்டவர் சிங்வி என்பது குறிப்பிட்டது.
அதன் பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டு இந்த விஷயத்தில் சோனியாவும் கருணாநிதியும் பேசி முடிவுசெய்வார்கள் என்று அறிவித்தார்.
காங்கிரசில் உள்ள முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தலைகளில் சிங்வியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் பட்டியல்:
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்றுதெரிகிறது.
பட்டியலில் இடம் பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளும் டெல்லியில் முகாமிட்டுள்ளன.காங்கிரஸ் அலுவலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு தமிழக கோஷ்டி நின்று கொண்டிருப்பதைபார்க்க முடிகிறது.
கட்சி அலுவலகத்துக்கு வந்து போகும் தலைவர்களுக்கு சலாம் போடுவது, கும்பிடு போடுவது, அப்படியேதங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு கெஞ்சுவது என காங்கிரஸார் படு பிஸியாக டெல்லியில் பொழுதைக்கழித்து வருகின்றனர்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications