ஜான் பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
சென்னை:
கோவையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜான் பாண்டியனுக்குவிதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கடந்த 1993ம் ஆண்டு கோவையில் விவேகானந்தன் என்ற இளைஞர் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் பாண்டியன் உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கோவை விரைவு நீதிமன்றம், 10 பேருக்கும்ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜான் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாலசுப்பிரமணியன், தணிகாச்சலம் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், ஜான் பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை மற்றும்அபராதத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்யிட்டஜான் பாண்டியன் பெரும் வன்முறையை நடத்தியதும், திமுக வேட்பாளர் பரிதிஇளம்வழுதியின் வீட்டைத் தாக்கியதும் நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் இப்போது தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜான்பாண்டியன், தனது மனைவியை அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும்உத்தரவிட்டுள்ளார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications