தொகுதி பறிப்பு: திமுகவுக்கு மு.லீக் கண்டனம்
திருப்பூர் :
பாளையங்கோட்டை தொகுதியை திமுகவே எடுத்துக் கொண்டது கூட்டணி தர்மத்தைமீறிய செயல் என்று திமுகவுக்கு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர்பிரிவு அமைப்பாளர் பாத்திமா சாஃபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் லீக்கட்சிக்கு வாணியம்பாடி,அரவக்குறிச்சி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.இதில் பாளையங்கோட்டையைத் தவிர மற்ற இரு தொகுதிகளுக்கும் அக்கட்சிவேட்பாளர்களை தேர்வு செய்து விட்டது. ஆனால், பாளையங்கோட்டை தொகுதிவேட்பாளரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வேட்பாளரைஅறிவிப்பது இழுபறியாக இருந்தது.
இதையடுத்து அத்தொகுதியை திமுகவே தன் வசம் எடுத்துக் கொண்டு தற்போதையஎம்.எல்.ஏ மைதீன் கானே மீண்டும் போட்டியிடுவார் என அறிவித்து விட்டது.
இது முஸ்லீம் லீக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும்இதை வைத்துப் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று அக்கட்சித் தலைமை முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில், கட்சியின் மகளிர் பிரிவு அமைபபாளர் பாத்திமா சாஃபர் திருப்பூரில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூட்டணி தர்மத்தை மீறி விட்டது திமுக. ஏற்கனவே கொடுத்ததை விட அதிகம்கொடுத்தால் சந்தோஷப்பட முடியும். ஆனால் கொடுத்ததையும் திருப்பிப் பறித்துக்கொண்டது நியாயமல்ல, நாகரீகமான செயலும் அல்ல என்றார்.
இதற்கிடையே, பாளையங்கோட்டை தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கு திரும்பவும்மாற்றக் கோரி பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் தவ்பாஜமாத் சார்பில் ஏராளமான முஸ்லீம்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
| INDIA NEWS |
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications