மதுரையில் ஒரே மேடையில் ஜெ-வைகோ-திருமா
சென்னை:
மதுரையில் வரும் 8ம் தேதி ஒரே மேடையில் முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம்நடைபெறவுள்ளது.
அதிமுக அணியின் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்து வருகிறது. ஜெயலலிதாசென்னையிலிருந்து தொடங்கி தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார். அதேபோலவைகோ நெல்லை மாவட்டத்திலிருந்து தொடங்கி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். திருமாவளவன் இன்று முதல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
இந் நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில்கலந்து கொள்ளும் பிரசாரப் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8ம் தேதி மதுரையில் இந்தக் கூட்டம் நடக்கிறது. மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிசந்திப்பில் நடைபெறும் இப் பொதுக் கூட்டத்தில்,
ஜெயலலிதா, வைகோ, திருமா, இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது,மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் முகம்மது இஸ்மாயில், மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இக் கூட்டத்தில் மதுரை மாவட்ட அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்கள்அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தலைவர்கள் வாக்கு சேகரித்துப் பேசுவார்கள்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications