ஜெ வேனை தாக்க முயன்ற அதிமுகவினர் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி வேட்பாளராக நடிகர் ஆனந்தராஜ் அறிவிக்கப்பட்டதைஎதிர்த்து முதல்வர் ஜெயலலிதாவின் வேன் மீது கம்பு, கொடிகளை வீசி கலாட்டா செய்த கட்சியினர்அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.

முதலில் நேரு என்பவரை வேட்பாளராக அறிவித்த ஜெயலலிதா பின்னர் அவரை மாற்றிவிட்டு ஆனந்த ராஜைநிறுத்தினார்.

சில நாட்களுக்கு முன் ஆனந்தராஜுக்காக பிரச்சாரம் செய்யப் போன ஜெயலலிதாவுக்கு பெரும் அதிர்ச்சிகாத்திருந்தது. அதிமுகவினரே ஜெயலலிதாவின் வேன் மீது கம்புகளையும் கொடிகளையும் வீசினர்.

யார் இந்த ஆனந்தராஜ் என்று கேட்டபடி ஜெயலலிதாவைப் பார்த்து கோஷமிட்டனர். நிலைமை மோசமானதைத்தொடர்ந்து அதிமுகவினர் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

இந் நிலையில் நேரு, பாண்டிச்சேரி மாநில அதிமுக துணைச் செயலாளர் செழியன், அண்ணா தொழிற்சங்கஇணைச் செயலாளர் லோகநாதன் ஆகிய உள்ளிட்ட 8 அதிமுகவினரை கூண்டோடு கட்சியை விட்டுநீக்கியுள்ளார் ஜெயலலிதா.

இவர்களுடன் அதிமுகவினர் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+