வைகோவுக்கு பெரும் தோல்வி நிச்சயம்: பாமக
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
வைகோவுக்கு இன்னும் 5 வருடம் ஆனாலும் ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கப் போவதில்லை என மத்திய அமைச்சர்அன்புமணி கூறினார்.
திண்டிவனத்தில் பாமகவினரிடையே அவர் பேசுகையில்,2001ம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் 27 தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், நாம் கேட்டதில் 8 மட்டுமே தந்தஜெயலலிதா மிச்ச தொகுதிகளை தன் மனம் போல கொடுத்தார்.
ஆனால், இந்த முறை கருணாநிதிடம் 31 கேட்டோம். அதில் 29யை நாம் கேட்ட தொகுதிகளாகவே தந்தார்.கேட்டதைத் தந்தவர் கலைஞர். சொல்வதைச் செய்பவரும் அவரே.
வைகோவை 19 மாதம் உள்ளே போட்டார் ஜெயலலிதா. ஆனால், இப்போது பாஸ்ட் இஸ் பாஸ்ட் என்றுஜெயலலிதாவும் வைகோவும் வசனம் பேசுகிறார்கள்.
13 வருடமாகிவிட்டது. வைகோவுக்கு இதுவரை ஒரு எம்எல்ஏ கூட கிடைத்ததில்லை. இன்னும் 5 வருடம்ஆனாலும் அவருக்கு அதே நிலை தான் ஏற்படும். இந்தத் தேர்தலில் மதிமுக பெரும் தோல்வியடையும் என்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications