கருணாநிதியை திட்டிய அதிமுக வாலிபர் கொலை
பெரம்பூர்:
சென்னை கொடுங்கையூரில் திமுக தலைவர் கருணாநிதியை திட்டிப் பேசிய அதிமுகவைச் சேர்ந்த வாலிபர்வெட்டிக் கொல்லப்பட்டார்.
கொடுங்கையூர் எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் ரவி சங்கர் (36). பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவர் அப்பகுதி அதிமுக மன்றச் செயலாளராகவும் இருந்தார்.இந் நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக தெருமுனைக் கூட்டம் போட்ட ரவி, கருணாநிதியை மிகக் கடுமையாகவிமர்சித்துப் பேசினார். இதை திமுகவைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் அடிதடியில் இறங்கினர். அப்போது இரும்பு பைப்பால்ரவியை தாக்கினார் ஜெயகாந்த். இதில் படுகாயமடைந்த ரவி மயங்கி விழுந்தார்.
இகையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவி மரணமடைந்தார். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த
ஜெயகாந்தன் கைது செய்யப்பட்டார்.ராயபுரத்தில் திமுக-அதிமுகவினர் மோதல்:
இந் நிலையில் ராயபுரத்தில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது.
இப் பகுதியில் மைக் செட் கடை நடத்தி வருபவர் கோவிந்தன். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
இவரிடம் மைக் செட் கேட்டு வந்தார் திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர். கோவிந்தன்மைக் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடித்துக் கெண்டனர்.
பின்னர் இருவருமே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இருவரிடமும் போலீசார்விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது காவல் நிலையத்துக்கு வெளியே அதிமுகவினரும்திமுகவினரும் திரண்டுவிட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே காவல் நிலையத்துக்கு வெளியிலேயே மோதல் வெடித்தது. அதிமுகவைச் சேர்ந்தபகுதி துணைச் செயலாளர் ராஜசேகர் என்பவர் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வரவே, திமுகவைச் சேர்ந்த அப்பகுதியின் இணைச் செயலாளர் ராஜசேகரும் பெரும் படையுடன் வந்தார்.
இதையடுத்து இரு தரப்பினரும் அடிதடியில் இறங்கினர். இரு தரப்பினரும் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்டன்.இதையடுத்து இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் திமுகவைச் சேர்ந்த 3 பேரையும் அதிமுகவைச் சேர்ந்த 2 பேரையும் கைதுசெய்தனர்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications