ஜெ-வைகோ பிக்பாக்கெட் கூட்டணி: யெச்சூரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில்,
கடந்த 5 வருடமாக தமிழகத்தில் என்ன நடந்தது? சட்டசபையில் ஜனநாயகத்துக்கே இடமில்லாமல் போனது.அரசு ஊழியர்களை கூண்டோடு சிறையில் போட்டார்கள்.கல்வியும் சுகாதாரமும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்து. 500க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளைமூடிவிட்டார் ஜெயலலிதா.
பிக்பாக்கெட் அடிப்பது மாதிரி மக்களுக்குத் தரப்பட்ட பல சலுகைளைப் பறித்துக் கொண்டார் ஜெயலலிதா. அந்தபிக்பாக்கெட்டுக்கு கூட்டாளியாக சேர்ந்திருக்கிறார் வைகோ.
ஜெயலலிதா அரசை பாஸிஸ ஆட்சி என்று சொன்னவர் வைகோ. நாங்கள் கூட அப்படிச் சொல்லவில்லை.ஜெயலலிதாவைத் தோற்கடிப்பது ஏதேச்சதிகாரத்தை தோற்கடிப்பது மாதிரி. அதைச் செய்து காட்டுங்கள் என்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications