திண்டிவனம் கட்சியில் அதிமுக ஆதரவு அணி கலகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரசில் கலகம் செய்து தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸை ஆரம்பித்த திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சியில்கலகம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவால் நடுத் தெருவில் விடப்பட்ட திண்டிவனம் தனித்துப் போட்டி என்று அறிவித்து ஆள் கிடைக்ககிடைக்க வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க ஆட்களைத்தேடி வருகிறார்.

இந் நிலையில் அவரை நம்பி கட்சிக்கு வந்து அவரோடு சேர்ந்து நடுத்தெருவில் நிற்கும் மாஜி எம்பிதண்டாயுதபாணி கட்சிக்குள் போர்க் கொடி உயர்த்தியுள்ளார்.

கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கனான மாஜி எம்பி கலியபெருமாள், மாஜி எம்எல்ஏ தங்கராஜ், ஜெயபால்ஆகியோரும் தண்டாயுதபாணியுடன் சேர்ந்துவிட்டனர்.

இவர்கள் அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவு தரப் போகிறார்களாம். இப்போது தஞ்சை மாவட்டத்தில்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவைத் தெரிவிக்க தஞ்சைக்குப்போயுள்ளனர்.

இவர்கள் தனியாக ஒரு கட்சி தொடங்கி அப்படியே அதிமுகவில் 2 சீட் வாங்கவும் முயற்சிப்பார்கள் என்றுதெரிகிறது.

காங்கிரசுக்கு திண்டிவனம் செய்ததை தண்டாயுதபாணி அவருக்குச் செய்து விட்டார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+