வயலுக்குள் இறங்கி ஓட்டு கேட்ட ஜெயலலிதா!!!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, வயல்களில்வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம், வயலில் இறங்கிச் சென்று ஓட்டுகேட்டார்.

அதே போல குடிசை வீட்டுக்குள் சென்றும் ஓட்டு கேட்டார்.

பொதுக் கூட்ட மேடையில் பேசுவதாக இருந்தால் தவிர மற்றபடி, வழக்கமாக அவர்தனது ஏசி வேனை விட்டு இறங்கவே மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இம்முறை போட்டி மிகக் கடுமையாக இருப்பதால் வயலுக்குள் இறங்கி ஓடிச்சென்றும் குடிசைகளுக்குள் புகுந்தும் வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளார்.

திருவாரூரில் பிரசாரம் செய்த ஜெயலலிதா, அங்கிருந்து கிளம்பினார். வழியில்,கட்சணம் என்ற கிராமத்து வயல் வெளியில் ஏகப்படட பெண்கள் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்த ஜெயலலிதா தனது பிரசார வாகனத்தை நிறுத்தஉத்தரவிட்டார்.

பின்னர் வேனிலிருந்து இறங்கிய ஜெயலலிதா, வயலுக்கு சென்றார். ஜெயலலிதாவைவருவதைப் பார்த்ததும் வேலையை விட்டு விட்டு அந்தப் பெண்கள் ஓடி வந்தனர்.

கும்பிட்டபடி வந்த அந்தப் பெண்களைப் பார்த்து பதிலுக்குக் கும்பிட்ட ஜெயலலிதா,அவர்களிடம் நெருங்கி நல்லா இருக்கீங்களா என்று குசலம் விசாரித்தார்.


ஜெ வேனுக்கு முன் ஓவர் ஆக்ஷன் சபாரியும்.. சம்மனம் போட்டு கும்பிடும் வேட்பாளர்களும்

பின்னர் அவர்களிடம் வழக்குக்கு மிக மாறாக ரொம்ப அன்னியோன்யமாக பேசியஜெயலலிதா, வரும் தேர்தலில் இரட்டை இலைக்கே உங்களது ஓட்டுக்களைப் போடவேண்டும், சரியா என்றார்.

அந்தப் பெண்களும்" கண்டிப்பா இரட்டை இலைக்குத்தாம்மா ஓட்டுப் போடுவோம்என்றனர். பின்னர் அவர்களிடம் வெள்ள நிவாரண உதவி கிடைத்ததா என்று முதல்வர்கேட்க, அந்தப் பெண்களும் கிடைத்தது அம்மா என்றனர்.

பின்னர் அவர்களிடம் விடைபெற்ற ஜெயலலிதா வேனில் ஏறி அருகில் இருந்தகொத்தங்குடி என்ற கிராமத்தை அடைந்ததும் வாகனத்தை நிறுத்தி சாலையோரம்இருந்த குடிசை வீடுகளை அடைந்தார்.

ஒரு வீட்டின் முன்பு போய் நின்ற அவரைப் பார்த்ததும் வீட்டுக்குள் இருந்தவர்கள்வியப்படைந்து வெளியே ஓடி வந்தனர்.

(வழக்கமாக எம்ஜிஆர் தான் குடிசை வீட்டுக்குள் புகுந்து கிழவிகளை கட்டிப்பிடித்துஅன்பைப் பொழிந்து ஓட்டு கேட்பார். இதே டெக்னிக்கை கருணாநிதியும் சிலமுறைகடைபிடித்துப் பார்த்து தோற்றார்)

அவர்களிடம் இரட்டை இலைக்கு மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் என்று அன்போடுகோரிக்கை விடுத்த ஜெயலலிதா விடை பெற்றுச் சென்றார்.

ஜெயலலிதா செல்லும் வேனைச் சுற்றி கருப்புப் பூனை கமாண்டோக்களும், சபாரி உடையணிந்தபாதுகாவலர்களும் ஓடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் சபாரி ஆசாமிகள் அமைச்சர் பாண்டுரங்கனை விடஅதிகமாக வளைந்து, குனிந்து நின்று கொண்டு வேனுக்கு அருகே வரும் அதிமுகவினரையும் பொதுமக்களையும் விரட்டி விடும் வேலையைச் செய்கின்றனர்.

வேன் வேகமாகப் போகும்போது மறைந்த அமைச்சர் எஸ்.டி.எஸ் மாதிரி துண்டு போட்டு வேனில் தொங்கிக்கொண்டு போகின்றனர்.

ஜெ பேட்டி:

பின்னர் திருவாரூர் அருகே நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு மிகஅமோகமாக உள்ளது என்றார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+