ஜெவிடம் கூலிக்கு மாரடிக்கும் நெ. கண்ணன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவிடம் காசு வாங்கிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கிறார் நெல்லை கண்ணன் என்று இந்துஇயக்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் வி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கைதாகாமல் தப்பிக்க முதல்வர் ஜெயலலிதாவிடம் காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர் ரூ. 400 கோடி பேரம்பேசியதாகவும் ஆனால் பணத்தை வாங்காமல் நீதியை நிலைநாட்ட அவரை ஜெயலலிதா கைது செய்ததாகவும்நாலாந்தர பேச்சாளர் போல பேசியுள்ளார் நெல்லை கண்ணன்.

50 வருடங்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை காங்கிரஸ் காங்கிரஸ் என்று கூறி வந்த கண்ணன் ஒரே நாளில்ஜெயலலிதாவைப் பார்த்து வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தில் சேர்ந்துகொண்டுள்ளார்.

அவருக்கு இனிமேல் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியப் போவதில்லை.

பிறந்ததில் இருந்து தாயை மட்டுமே அம்மா என்று அழைத்தவர் இன்று தன் அம்மா ஜெயலலிதா மட்டும் தான்என்று தன் ஜாதகத்தையே செல்லச் செழிப்புக்காக மாற்றிக் கொண்டுவிட்டார்.

இனிமேல் இவரைப் போன்ற ஒரு ஆசாமியிடம் உண்மையையும் பண்பையும் முட்டாள் கூட எதிர்பார்க்கமாட்டான் என்று டோஸ் விட்டுள்ளார் முரளி.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+