அண்ணா அறிவாலயத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
சென்னை:
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் ஒரு வாலிபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டுதற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் திமுகவினர் பலரும் பல வகையான போராட்டங்களில்ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில் இன்று காலை ஒரு வாலிபர் அறிவாலயத்துக்கு வந்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த கட்சியினர் அமுக்கிப் பிடித்தனர்.
அவரது கையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், நான் மதுரையைச் சேர்ந்தவன். என் பெயர் சாதிக். தனித் தமிழர்சேனையின் தலைவர் நகைமுகனின் மகள் மதிவதன நாச்சியாரை நான் காதலித்து திருமணம் செய்தேன்.
ஆனால், என்னையும் நாச்சியாரையும் பிரித்துவிட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. பின்னர் சாதிக் கூறுகையில், எனக்கு ஏற்பட்ட நிலை குறித்து ஸ்டாலினைசந்தித்துப் பேசவும் அவரது உதவியைப் பெறவும் வந்தேன். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. இதனால்தான் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications