இன்னொரு வைகோ ஆவாரா வெ.கோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தி.நகரில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அக் கட்சியின் பேச்சாளரான வெற்றிகொண்டான் பேசியதாவது:

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க காரணமாய் இருந்தவர் கருணாநிதி. மத்திய அரசின்செயல்பாடுகளை கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் மாநில அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் கண்காணித்து வருகிறார்.

2 ரூபாய்க்கு எப்படி அரிசி தருவார் என்று ஜெயலலிதா கேட்கிறார். நிலமற்ற விவசாயிகளுக்கு ஏக்கர் நிலம்எப்படித் தருவார் என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டை 14 வருடம் ஆண்டவருக்கு இதையெல்லாம் எப்படித்தருவது என்று தெரியாதா?

மத்திய அரசு எங்கள் அரசு. இதனால் அவர்களிடம் மானியம் கேட்போம். வெட்டிச் செலவுகளைக் குறைத்துரேசன் அரிசியை 2 ரூபாய்க்குக் கொடுப்போம். மத்திய நிதியமைச்சரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தானே.அவரிடம் பேசி நிதியை ஒதுக்க வைப்போம்.

அதே போல நிலமில்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாகவே வழங்குவோம். தமிழ்நாட்டில் ஒவ்வொருகுடிமகனும் சாகும்போது தன் சொந்த இடத்தில் சாக வேண்டும். அநாதையாக பிச்சைக்காரர்களாக சாகக் கூடாதுஎன்பதற்காக இந்தத் திட்டத்தை திமுக அறிவித்துள்ளது.

பட்டதாரிகளாக உள்ளவர்கள் பலர் பட்டா (நிலப் பட்டா) இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை பட்டா உள்ளபட்டதாரிகளாக மாற்றுவோம்.

எங்கிருந்து நிலத்தைத் தருவீர்கள் என்கிறார்கள். அரசு நிலம் இருக்கிறது. ஏன், கோவில்களின் பட்டுப்பாட்டில்எத்தனையோ ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனற்றுக் கிடக்கின்றன. அதை ஏழைகளுக்கு இரண்டிரண்டு ஏக்கராகஇலவசமாகத் தருவோம்.

திமுக கூட்டணிக்கு மிக பலமான பிரச்சாரம் செய்யப்படவுள்ளது. சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்,லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம் ஆகியோரெல்லாம் வந்திறங்க் போகிறார்கள். இதனால் கூட்டணிக்கு வெற்றிநிச்சயமாகிவிட்டது என்றார் வெற்றி கொண்டான்.

வெற்றி கொண்டானை அதிமுகவுக்கு இழுக்க அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த சசிகலா மூலமாக முதல்வர்ஜெயலலிதா ஒரு பக்கம் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.

வெ.கோவும் வைகோ வழியில் அரசியல் ஜம்ப் செய்வாரா என்பதைப் பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+