For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் தொண்டை வலி-கேப்டன் பிரசாரம் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் விஜயகாந்த்துக்கு மீண்டும் தொண்டையில் புண் ஏற்பட்டு வலிஏற்பட்டுள்ளதால் அவரது பிரசாரம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலையொட்டி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர்களுக்குஆதரவு திரட்டுவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்விஜயகாந்த்.

தொடர்ந்து பிரசாரத்தில் பேசி வருவதால் அவரது தொண்டையில் புண் ஏற்பட்டுஇரண்டு முறை அவஸ்தைப்பட்டார். ஒருமுறை வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.

இந் நிலையில், சென்னை அருகே உள்ள செங்குன்றம், புழல், சோழவரம், பொன்னேரிஉள்ளிட்ட பகுதிகளில் அவர பிரசாரம் மேற்கொண்டார். பொன்னேரியிலபேசியபோது அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

இதையடுத்து தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது, என்னால் தொடர்ந்து பேசமுடியவில்லை என்று கூறிய விஜயகாந்த் பிரசாரத்தை பாதியில் நிறுத்தினார்.

பின்னர் அவர் சின்னக்காவானம் என்ற கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குசென்றார். அங்கு 3 மணி நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4 மணியளவில்மீண்டும் பிரசாரத்துக்குக் கிளம்பினார்.

ஆனால் அவரால் பேச முடியவில்லை. இதனால் வெறுமனே கையை மட்டும்அசைத்தவாறு சில கிராமங்களைக் கடந்தார்.

பேசாமல் பிரசாரம் செய்வது நின்றாக இருக்காது என்பதால் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்குத் திரும்பினார்.

ஓய்வுக்குப் பின் புதன்கிழமை முதல் மீண்டும் திட்டமிட்டபடி பிரசாரம் தொடரும்என்று விஜய்காந்த் வட்டாரங்கள் தெரிவித்தன.

சுதேசி: வழக்கு தள்ளுபடி:

இதற்கிடையே விஜயகாந்த் நடித்த சுதேசி படத்திற்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சுதேசி சமீபத்தில் வெளியானது. முழுக்க முழுக்க தேர்தல் பிரசாரத்திற்காகவே எடுக்கப்பட்டது போல, ஏகப்பட்ட அறிவுரைகள், விஜயகாந்த்தின்அரசியல் திட்டங்களைக் கூறும் அப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்என்றும் கோரி தமிழ்நாடு பட்டதாரிகள் மன்றம் மற்றும் இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர், சுதேசி படத்திற்குத் தடை விதிக்க முடியாது என்றுகூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X