பிஇ, எப்பிஎஸ்: நுழைவு தேர்வு தேதி மாற்றம்
சென்னை:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தேதிகளை தமிழக அரசு மாற்றியுள்ளது. அதன்படி மே 18 மற்றும் 19 ஆகியதேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுஅதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.ஆனால், அந்த சமயத்தில், சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக மாநிலத்தில்உள்ள முக்கியமான கல்லூரிகள் தேர்தல் ஆணையத்தின் வசம் இருக்கும் என்பதால்நுழைவுத் தேர்வு தேதிகளை மாற்றக் கோரி, நுழைவுத் தேர்வை நிடத்தும் பொறுப்பில்உள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தமிழக அரசுக்கு கடிதம்எழுதினார்.
அவரது பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு தற்போது நுழைவுத் தேர்வு தேதியைமாற்றியுள்ளது.
அதன்படி மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம்உடனடியாக மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications