சசி கும்பலின் மதுபான கொள்ளையை தடுத்தாலே 53 லட்சம் கலர் டிவி கொடுக்கலாம்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 53 லட்சம் குடும்பத்திற்கு மட்டுமே கலர்டிவி வழங்கப்படும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல்வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். அதில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிதான்கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ரூ.2க்கு ரேஷன் அரிசி, அனைவருக்கும் கலர் டிவி சாத்தியமா அன எதிர்கட்சிகளின்அரசியல் மேடைகளில் கேள்வி எழுப்பப்பட்டது. சன்டிவியை வாழ வைக்கவேஇலவச கலர் டிவி திட்டத்தை அறிவித்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலர் டிவி சாத்தியம் குறித்து செல்லும்மேடைகளிலெல்லாம் தவறாமல் குறிப்பிட்டும், கடுமையாக விமர்சித்தும் வந்தார்.கடும் விமர்சனத்திற்கு உள்ளான கலர்டிவிக்கு விளக்கம் எப்ரல் 5ம் தேதி நடைபெறும்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டம் பொது மக்களிடமும், மீடியாக்களிடமும் பலத்த எதிர்பார்ப்பைகிளப்பியிருந்தது. இந் நிலையில் திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்ற முதல்பிரச்சார கூட்டம் சென்னை புரசை வாக்கத்தில் நடந்தது.

அதில் கருணாநிதி பேசியதாவது:மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்று கொள்ளை (மன்னார்குடிகும்பலுக்கு) போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைதடுத்தாலே டிவி பெட்டிகளை வாங்குவதற்கு நிச்சயமாக பணம் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 156 லட்சம். இதில்வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 53 லட்சம்.அத்தனையிலும் தொலைகாட்சி பெட்டி இல்லை என்று வைத்துக்கொண்டாலும்முதற்கட்டமாக அவர்களுக்கு கொடுக்க தேவையான தொலைகாட்சி பெட்டிகளின்எண்ணிக்கை 53 லட்சம் ஆகும்.

2 ஆண்டு காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் அனைத்தையும் கொடுத்து விடலாம்.53 லட்சம் தொலைகாட்சி பெட்டிகள் ரூ. 2,000 செலவில் வழங்க ரூ. 1,600கோடிதான் ஆகும். ஆண்டு ஒன்றுக்கு ரூ. 530 கோடி தான் செலவாகும்.

ரூ. 30,000 கோடி நிதிநிலை அறிக்கையில் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கான ரூ.530 கோடி செலவு என்பது தவறல்ல.

மேலும் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் உற்றார், உறவினர் , நெருங்கியசொந்தக்காரர்கள் நடத்தும் "மிடாஸ் மதுபான ஆலையில் என்ன நடக்கிறது?.

குறைந்த விலைக்கு மட்டமான சரக்குகளை வைத்து, உயர்ந்த சரக்கின் "லேபிள் ஒட்டிஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றனர். அதை மட்டும் நிறுத்தினாலேஏழைகளுக்கு இலவச டிவி வழங்க பணம் கிடைக்கும் என்றார் கருணாநிதி.

அரிசிக்கு விளக்கம்:

தமிழகத்தில் மாதாந்தோறும் ரேசன் அரிசி வாங்குபவர்கள் 1.5 கோடி பேர்,அவர்களுக்கு 20 கிலோ அரிசி வீதம் 30 கோடிக்கு அரிசி வழங்க வேண்டியிருக்கிறது.

தற்போதைய விலை ஒரு கிலோ ரூ 3.50. இதை ரூ.2 என குறைத்தால் கூடுதல் செலவுகிலோவுக்கு ரூ 1.50 தான்.

இதனால் 30 கோடி கிலோவுக்கு மாதம் ஒன்றுக்கு கூடுதல் செலவு ரூ. 45 கோடி தான்.

இதன்படி பார்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 540 கோடி மட்டுமே கூடுதல் செலவாகும்.எனவே ஒருகிலோ அரிசி ரூ 2க்கு போட முடியும். ரூ. 30,000 கோடிக்கு போடப்படும்பட்ஜெட்டில் ரூ 540 கோடி என்பது பெரிய விஷயமல்ல என்றார் கருணாநிதி.

அரிசிக்கு விளக்கம்:

தமிழகத்தில் மாதாந்தோறும் ரேசன் அரிசி வாங்குபவர்கள் 1.5 கோடி பேர்,அவர்களுக்கு 20 கிலோ அரிசி வீதம் 30 கோடிக்கு அரிசி வழங்க வேண்டியிருக்கிறது.

தற்போதைய விலை ஒரு கிலோ ரூ 3.50. இதை ரூ.2 என குறைத்தால் கூடுதல் செலவுகிலோவுக்கு ரூ 1.50 தான்.

இதனால் 30 கோடி கிலோவுக்கு மாதம் ஒன்றுக்கு கூடுதல் செலவு ரூ. 45 கோடி தான்.

இதன்படி பார்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 540 கோடி மட்டுமே கூடுதல் செலவாகும்.எனவே ஒருகிலோ அரிசி ரூ 2க்கு போட முடியும். ரூ. 30,000 கோடிக்கு போடப்படும்பட்ஜெட்டில் ரூ 540 கோடி என்பது பெரிய விஷயமல்ல என்றார் கருணாநிதி.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+