கருத்து கணிப்பு-அதிமுக செல்வாக்கு அதிகரிப்பாம்
சென்னை:
அதிமுக கூட்டணிக்கு கடந்த 2 மாதங்களில் செல்வாக்கு கணிசமாகஉயர்ந்திருப்பதாகவும் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 167 தொகுதிகள் வரைகிடைக்கக் கூடும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் அதிமுக கூட்டணிமீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றியை ஈட்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், உளவுப் பிரிவு மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிமுகவேஎடுத்த சர்வே அந்தக் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதை தெளிவாக்கியுள்ளது.(நன்றி-நக்கீரன்)
இதையடுத்தே சினிமா ஆர்டிஸ்டுகளைப் பிடித்துப் போட்டு ஓட்டு வேட்டையாடலைதீவிரமாக்கியுள்ளது அதிமுக.
இந் நிலையில் மார்க்கெட் அன்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் (நீங்ககேள்விப்பட்டிருக்கீங்களா?) என்ற நிறுவனம் எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் ஜெயலலிதாமீண்டும் ஆட்சியைப் பிடிப்பார், அதிமுக கூட்டணிக்கு 167 தொகுதிகள் வரைகிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் கருத்துக் கணிப்பை நடத்தியதாம். அந்தக்கருத்துக் கணிப்பில், அதிமுக கூட்டணிக்கு 146 முதல் 157 தொகுதிகள் வரைகிடைக்கும், திமுக கூட்டணிக்கு 78 முதல் 83 தொகுதிள் வரை கிடைக்கும் என்றுதெரிய வந்ததாம்.
அதிமுக கூட்டணிக்கு 44.5 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 43.7 சதவீதவாக்குகளும் கிடைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகிறதாம்.
ஆனால் தற்போது (மார்ச்-ஏப்ரல்) எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் அதிமுகவின்செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் அதிமுக கூட்டணிக்கு 162முதல் 167 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும் தெரிய வந்துள்ளதாம்.
திமுக கூட்டணிக்கு அதிகபட்சம் 67 தொகுதிகள் தான் கிடைக்குமாம்.
கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது திமுக கூட்டணியில்மதிமுக இடம் பெற்றிருந்தது.
இந்தக் கருத்துக் கணிப்பில் புதிய தகவலும் கிடைத்துள்ளதாம்.
அதாவது மதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளதால் அதிமுகவுக்கு பெரிய அளவில்பலன் கிடைக்கவில்லையாம்.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுக4.65 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகள் தற்போது அதிமுக கூட்டணிக்குஅப்படியே கிடைத்திருந்தால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணிவெற்றி பெற்றிருக்கும்.
ஆனால் கருத்துக் கணிப்பு முடிவுகளில் அப்படி ஒரு மாற்றம் இல்லாததால்,மதிமுகவினால் பெரிய அளவில் அதிமுகவுக்கு பலன் கிடைக்கப் போவதில்லையாம்.
யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வியையும் கேட்டார்களாம்.
கடந்த ஜனவரி மாதம் 58 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கருத்துதெரிவித்தார்களாம். கருணாநிதிக்கு ஆதரவாக 40 சதவீதம் பேர் கருத்துவெளியிட்டார்களாம்.
இப்போதைய கருத்துக் கணிப்பில் ஜெயலலிதாவுக்கு ஆதரவானவர்களின்எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்து 57 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாகவாக்களித்துள்ளனராம்.
அதேசமயம் கருணாநிதிக்கும் ஒரு சதவீதம் ஆதரவு குறைந்துள்ளதாம்.
நடிகர் விஜயகாந்த்துக்கு கணிசமான ஆதரவு கிடைத்துள்ளதாம். ஆனால் இதுவாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமாம்.
மொத்த வாக்குகளில்10 சதவீதம் வாக்குகள் வரை விஜயகாந்த் பெறக் கூடும் என்றும்அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் அதிமுகவுக்குலேசான பாதிப்பு இருக்கக் கூடுமாம்.
ஜெயலலிதா, கருணாநிதிக்கு சரியான மாற்று யார் என்ற கேள்விக்கு 27 சதவீதம் பேர்விஜயகாந்த் பெயரை சொன்னார்களாம்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 60 சதவீதம் பேர் விஜயகாந்த்மாற்றத்தை ஏற்படுத்துவார் என குறிப்பிட்டிருந்தாலும் கூட அவர்களில் 3 சதவீதம்பேர் மட்டுமே விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் எனதெரிவித்தார்களாம்.
இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications