காமெடி செந்தில் கூட்டத்தில் பாமக ரகளை!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

நடிகர் செந்தில் கலந்து கொண்ட அதிமுக பிரசாரக் கூட்டத்தில் பாமகவினர் பெரும்ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டசபைத் தொகுதியில் அதிமுகசார்பில் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து நடிகர்கள் செந்தில்,விஜயக்குமார் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

வேடந்தவாடி என்ற கிராமத்தில் செந்தில் பிரசாரத்தில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது வழக்கம் போல திமுக கூட்டணித் தலைவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடினார்.

பாமக நிறுவனர் ராமதாஸையும் சகட்டு மேனிக்கு போட்டு வாங்கினார்.

இதனால் கொந்தளித்த அந்தப் பகுதி பாமகவினர் செந்தில் பேசிக் கொண்டிருந்தஇடத்திற்கு விரைந்தனர். செந்திலை நோக்கி டேய் என்று ஆரம்பித்து குண்டக்கமண்டக்க ஆபாசமாகப் பேசினர்.

மேடையை நோக்கியும் முன்னேறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுகவினரும் பதிலுக்கு பாமகவினருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

நிலைமை ரசாபாசமாகி விடுவதற்குள் போலீஸார் விரைந்து வந்து இருதரப்பினரையும்சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

அதன் பின்னர் செந்தில் அத்தோடு தனது பேச்சை முடித்துக் கொண்டுஅமர்ந்துவிட்டார். ரகளை பயத்தில் அவரது உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+