அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் டிஐஜி சிவனாண்டி!
சென்னை:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் உளவுத்துறையின் டிஐஜிசிவனாண்டியும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
![]() |
சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவரான சிவனாண்டி தான் இப்போது காவல்துறையில் வானளாவியஅதிகாரத்துடன் வலம் வருகிறார்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் சிவனாண்டி முதல்வரின் பாதுகாப்புக்கு வருவதாகக்கூறிக் கொண்டாலும் கூடும் கூட்டத்தில் சிலரை தேர்வு செய்து அவர்களிடம் பீட்-பேக் கேட்கிறார். அதிமுகவின்ஓட்டு பலம் குறித்து விசாரிப்பது, பெண்கள் வாக்கு குறித்து விசாரிப்பது, சிலரிடம் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கஎன்று வெளிப்படையாகவே கேட்பது என கிட்டத்தட்ட அதிமுக ஒன்றியச் செயலாளரின் வேலையைசிறப்பாகவே செய்கிறார்.
![]() |
| கூட்டத்தோடு கூட்டமாய் சிவனாண்டி (இடதுபுறம் வெள்ளை சட்டை-பேண்ட் அணிந்துள்ளவர்) |
மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு கூட்டம் சேராவிட்டால் அதையும் அதிமுகவினருடன் சேர்ந்துசிவனாண்டியே ஏற்பாடு செய்வதாகவும் கூறப்படுகிறது. பண்ருட்டியில் கூட்டம் இல்லாத நிலையில் அப்பகுதியின் ஜெ. பேரவைச் செயலாளரை அழைத்து சிவனாண்டி பேசியதையடுத்து லாரிகளின் ஆட்கள் கூட்டிவரப்பட்டு கூட்டம் காட்டப்பட்டுள்ளது.
சிவனாண்டி இவ்வாறு அதிமுக வேலை செய்வதை நிருபர்களும் போட்டோகிராபர்களும் படம் பிடிப்பதைஉளவுப் பிரிவு போலீசார் தடுக்கின்றனர். இதற்கென்றே சிவனாண்டியுடன் ஒரு படை சாதாரண உடையின் உடன்வருகிறது.
தனது வீட்டையே இவர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எதிரில் மாற்றிக் கொண்டு வந்துவிட்டதை நாம்ஏற்கனவே போட்டோவோடு வெளியிட்டது நினைவுகூறத்தக்கது.
| INDIA NEWS |














Click it and Unblock the Notifications