விஜய்க்கு தலைவலி தரும் ஆண்டிப்பட்டி மாதவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேனி மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர் என்ற பெயரில் ஆண்டிப்பட்டி தொகுதியில்மாதவன் என்பவர் போட்டியிடப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மைஇல்லை. எனது பெயரையும், ரசிகர் மன்றப் பெயரையும் தவறாகப் பயன்படுத்துவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தேனி மாவட்டவிஜய் ரசிகர் மன்றத் தலைவர் மாதவன் என்பவர் போட்டியிடப் போவதாக செய்திகள்வெளியாகின. இதனால் அதிமுக மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்புகிளம்பியது.

இந் நிலையில் இச்செய்திகளை மறுத்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துவிஜய் ரசிகர் மன்றம் போட்டி என்று செய்தி வெளியானதைப் படித்து அதிர்ச்சிஅடைந்தேன்.

ஆச்சரியம் என்னவென்றால், போட்டியிடும் மாதவன் என்பவர் எனது ரசிகர் மன்றத்தலைவரே அல்ல. தேனி மாவட்டத்தின் தலைவர் பதவி யாருக்கும் இதுவரைகொடுக்கப்படவில்லை.

மதுரை மாவட்டத் தலைவரான தங்கபாண்டிதான் தேனி மாவட்டப் பொறுப்பையும்தற்போது கவனித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே போட்டியிடும் மாதவனுக்கும், எனக்கும், எனது ரசிகர் மன்றத்துக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. தனி ஒரு தமிழனுக்கு தேர்தலில் போட்டியிடும் முழுஉரிமையும் உண்டு.

ஆனால் என்னுடைய மன்றத்தின் சார்பாக போட்டியிடும் தகுதியும், உரிமையும்மாதவனுக்கு இல்லை என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் தேர்தலில் என்னுடைய பெயரையோ, மன்றத்தின் பெயரையோ தவறாகமாதவன் பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் மாதவனைக் கண்டித்து ஆண்டிப்பட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள எனதுரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களித்து எதிர்ப்பைத்தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+