வாக்காள சாமிகளே வணக்கம்!
சென்னை:
கடவுளை நம்புவதை விட கடவுச் சீட்டை கையில் வைத்துள்ள வாக்காளர்களைநம்புவதே மேல் என்று வாக்காளர்களை கடவுளாக்கி பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்வால்பாறை எம்.எல்.ஏ. கோவை தங்கம்.
தேர்தல் நேரத்தில் ஏகப்பட்ட ஸ்டண்டுகளில் இறங்குவார்கள் அரசியல்வாதிகள்.இந்தத் தேர்தலிலும் இப்படிப்பட்ட தடாலடி ஸ்டண்டுகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன.வால்பாறை (தனி) தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்கோவை தங்கம். இவர் கோவை மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க நூதன உத்தியைக்கடைப்பிடித்துள்ளார்.
வாக்களிக்கும் விழா அழைப்பிதழ் என்ற பெயரில் அழைப்பிதழ் வடிவில் துண்டுப்பிரசுரங்களைஅடித்து வாக்காளர்களுக்கு வினியோகித்து வருகிறார்.
கோவை மேற்கு தொகுதியில் இந்த அழைப்பிதழ் உலா போக ஆரம்பித்துள்ளது. இந்தஅழைப்பிதழின் மேல் வாக்காளர் துணை என்று போடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தேர்தல் நாள், மே 8
நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை என்று பூப்புனித நீராட்டு விழாகணக்கில் தேர்தல் அழைப்பிதழை அடித்துள்ளார் தங்கம்.
அழைப்பிதழின் கீழே இது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கூட்டு அழைப்புஎன்றும் கூறப்பட்டுள்ளது.
திருமண அழைப்பிதழ் போல மங்களகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த துண்டுப்பிரசுரம் கோவை மேற்குத் தொகுதி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நல்ல வேலை தேர்தல் விழாவுக்கு (ஓட்டு போட) வருபவர்கள் மொய் எழுதவேண்டும் என்று கூறவில்லை கோவை தங்கம்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications