இலங்கை தமிழ் மக்கள் பேரவை தலைவர் கொலை
கொழும்பு:
இலங்கையின் திரிகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான விக்னேஸ்வரன் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கை ராணுவத்தின் உதவியுடன் தான் இந்தக் கொலை நடந்துள்ளதாக விடுதலைப் புலிகள்அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்துக்குப் பதிலாக இன்று நாடாளுமன்றஉறுப்பினராக இன்று அறிவிக்கப்பட இருந்தார் விக்னேஸ்வரன். இந் நிலையில் அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.திரிகோணமலையில் தான் பணியாற்றும் வங்கிக்குள் நுழைந்தபோது அவர் சுடப்பட்டார். இரு ராணுவ சோதனைச்சாவடிகளுக்கு இடையே, காவல் நிலையத்துக்கு அருகே, இலங்கை கடற்படைத் தளத்தின் பகுதியில் இச் சம்பவம்நடந்தது. இது உயர் மட்ட பாதுகாப்பு கொண்ட ஒரு பகுதியாகும்.
இந்தக் கொலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்துநாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடங்கியது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மே 9ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில், இலங்கை ராணுவத்தின் உதவியுடன் தான் இந்தக் கொலை நடந்துள்ளதாக விடுதலைப் புலிகள்அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இருவர் துப்பாக்கிகளுடன் வந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும், அவர்கள் இலங்கை ராணுவத்தின் உதவிஇல்லாமல் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கவே முடியாது என்றும் புலிகள் கூறியுள்ளனர்.
ஜெனீவாவில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விடுதலைப் புலிகளை விலகச் செய்யும் ஒருமுயற்சியாகவே இந்தக் கொலை நடந்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பியான கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications