தந்தை, சித்தி, பாட்டியைக் கொன்ற வாலிபர்

Subscribe to Oneindia Tamil

பாபநாசம்:

பாபநாசம் அருகே பணப் பிரச்சனை காரணமாக தந்தை, சித்தி, பாட்டி மூவரையும்வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கணபதி அக்ஹாரம் கானி இருப்பு தெருவைசேர்ந்தவர் தாஸ் அய்யா (46). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவியின்மகன் ராஜேஷ் (22). இவர் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலை பார்கிறார்.

இவரது இரண்டாவது மனைவி பாக்கியத்திற்கு (30) செல்வராணி (6) என்ற மகளும்,செல்லத்துரை (3) என்ற மகனும் உள்ளனர்.

தனது 2வது மனைவி, வளர்ப்புத்தாய் ஞானம்பாளுடன் ஆகியோருடன் தான் தாஸ்வசித்து வந்தார். சமீபத்தில் தனது 2வது மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்குகாதுகுத்து விழா நடத்தினார் தாஸ்.

இதற்காக தனக்கு சொந்தமான நிலத்தில் பாதியை விற்றுள்ளார். இதனால் முதல்மனைவியின் மகன் ராஜேஷ், அந்தப் பணத்தில் தனக்கும் பாதியைத் தர வேண்டும்என கேட்டார்.

இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந் நிலையில் ராஜேஷ் நேற்று மாலைதாஸ் வீட்டிற்கு சென்று பணம் கேட்டார்.

பணம் தரம் முடியாது என தந்தை உறுதியாக கூறினார். ஆத்திரமடைந்த ராஜேஷ்அருகில் இருந்த அரிவாளை எடுத்து தந்தையை சராமாரியாக வெட்டினார்.

அருகில் இருந்த பாக்கியமும், ஞானாம்பாள் ஆகியோர் ராஜேஷை தடுக்க முயன்றனர்.அப்போது ஞானம்பாளையும் ராஜேஷ் வெட்டினார்.

இதை பார்த்த பாக்கியம் அலரி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார்.ஆனால் ஆத்திரம் அடங்காத ராஜேஷ், தெருவில் ஒட ஒட விரட்டிச்சென்றுபாக்கியத்தையும் வெட்டிக் கொன்றார்.

மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அங்கிருந்து தப்பி சென்றராஜேஷ் தலைமறைவாக உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+